நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கங்குவா படம் வெளியாகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவான கங்குவா பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கங்குவா அமையும் என்றும் சொல்கிறார்கள்.
2021 ஆம் ஆண்டு ஜெய்பீம் படத்துக்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதால், சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர். கங்குவா திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 34 நிமிடமாக உள்ளது.
படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், சூர்யா பல பேட்டிகளில் இந்த படத்தை தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திஷா படானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் ரிலீசாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரிச் அண்ட் மிடில்கிளாஸ் லுக்! விருப்பமில்லாமல் நடிக்க வந்து வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ்
விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க!