ரூ.32 கோடி மதிப்பு… பங்களாவை விற்பனை செய்த கங்கனா

சினிமா

இந்தி, தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர், இயக்கி, நடித்து தயாரித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் சட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பு, சீக்கிய அமைப்புகளின் மிரட்டல், காரணமாக மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தியது. அதனால் அறிவிக்கப்பட்ட படி படம் வெளியாகவில்லை.
இந்தப் படத்தை தனது முழு சொத்தையும் விற்று எடுத்திருப்பதாக பல நேர்காணல்களில் கங்கனா ரணாவத் கூறி வந்தார்.

இந்த நிலையில் அவர், மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை 32 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன.

இந்த பங்களாவை 6 வருடத்திற்கு முன்பு 20 கோடிக்கு வாங்கியிருந்தார் கங்கனா. பாஜகவைச் சேர்ந்த கங்கனா மகாராஷ்ரா மாநிலத்தை ஆண்ட சிவசேனா அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தீவிரமாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததால் பங்களாவை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டியிருப்பதாக கூறி முன்பகுதியை இடித்தார்கள்.

இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா. இந்த வழக்கில் அப்போது அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது அந்த வீட்டைதான் விற்றுள்ளார் கங்கனா.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த தந்தை… அதிர்ச்சியில் உறைந்த மலைகா!

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *