சந்திரமுகி 2-ஆம் பாகத்தில் கங்கனா ரனாவத் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் ஆகியோர் நடிப்பில் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. 6 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான இப்படம் 40 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
தற்போது, நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். 2ஆம் பாகத்திலும் வடிவேலு நடிக்கிறார்.
இந்த படத்துக்கான நாயகி யார் என்ற கேள்விதான் சந்திரமுகி பட ரசிகர்கள் மத்தியிலிருந்து வந்தது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 10) சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது.
முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது கங்கனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் கங்கனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!
மலக்குழி மரணம் : விட்னஸ் படம் எப்படி?