90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றான ‘ கனா காணும் காலங்கள் ‘ தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் வெளியாகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான தொடர் ‘ கனா காணும் காலங்கள் ‘. பள்ளி மாணவர்களின் வாழ்வியல், நட்பு, மன ஓட்டம், காதல் என அனைத்தையும் சரியாக பதிவு செய்த ஒரு தொடர் இது என்றே கூறலாம். பொதுவாக தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே குடும்பப் பெண்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் டீன் ஏஜ் மாணவர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சித் தொடர் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தத் தொடர்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் அப்போது தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர்களை தங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்வது, அவர்கள் செய்வதை நிஜ வாழ்வில் செய்து பார்ப்பது என அக்கால டீ வாழ்வோடு கலந்து இருந்தது இந்தத் தொடர். இந்த நிலையில், இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது. முதல் இரண்டு சீசன்கள் போலவே இந்த சீசனிலும் தற்கால மாணவர்களின் பள்ளி வாழ்வியல் , சமூக அச்சங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் மையமாக இருக்கும் என இந்தத் தொடரின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
“கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்” : நீதிபதி கண்டனம்!
உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட ’லாப்பட்டா லேடீஸ்’ : அமீர்கான் பெருமிதம்!