விக்ரம் படம் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக உள்ளார். இந்தியன் 2 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அவர்களின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டதாக சமீபத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டது.
மேலும் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரபாஸின் கல்கி படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் KH233, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் கமல் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனும் மணிரத்னமும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் என்பதால் KH234 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் KH234 படத்திற்காக கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது Glimpse வீடியோ வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
KH234 படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!
ODI Worldcup 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!