சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது கோலிவுட்டில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உலகளவில் மிகப்பெரும் வசூல் சாதனையுடன் மாபெரும் வெற்றி பெற்றது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம்.
இதுவரை 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன். அதன் வெற்றியை படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மணிரத்னம், படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார்.
இதனையடுத்து அடுத்த வரும் கோடைகால விடுமுறையை குறிவைத்து தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். அதற்கான தயாரிப்பு பணியில் மணிரத்னம் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு இயக்குநராக காலத்திற்கேற்ப வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கும் மணிரத்னம், அடுத்து எந்த ஹீரோவை வைத்து, என்ன படம் பண்ண போகிறார் என்பது குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்தப்படம் தொடர்பான அப்டேட்டை இன்று வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்.
அவர் வெளியிட்ட வீடியோவில், உலகநாயகன் கமல் ஹாசனின் 234ஆவது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இந்தப்படம் வரும் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்க சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அப்டேட்டால் கமலின் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1987ம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் நாயகன்.
தீபாவளியன்று வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. நாட்டில் மும்பை, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது.
இந்தாண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பிறகு கமலும், மணிரத்னமும் இணைந்திருப்பது தமிழ் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!
T20WorldCup2022: கடைசி போட்டியில் கதகளி… பாகிஸ்தானை முந்திய இந்தியா