”மதுவிலக்கு அமலானால் கள்ளச்சாராயம் அதிகமாகும்” : கமல்ஹாசன்

Published On:

| By Selvam

Indian 2 Movie Press Meet

லைகா – ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தியன் – 2, 3 படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியான நிலையில் படம் தணிக்கை குழுவால் பார்க்கப்பட்டு u சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் இரண்டாவது அரையாண்டின் தொடக்கத்தில் வெளியாக உள்ள இந்தியன் – 2 படத்தை திரையரங்குகள் தரப்பில் வணிக ரீதியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 12ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் படத்தில் நடித்துள்ள திரைக்கலைஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று பகல் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் படத்தின் நாயகன் கமல்ஹாசன் பேசியதாவது,

இந்தியன்-2 திரைப்படம் இந்தியன் 2-மற்றும்,இந்தியன்-3 என இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. இந்தியன்-2 திரைப்படத்தை காட்டிலும் இந்தியன்-3 படத்திற்காக நான் ஆவலாக காத்திருக்கிறேன். அதற்காக இந்தியன் -2 பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

எனக்கு பிடித்த காட்சிகள் இந்த இரண்டு பாகங்களிலும் இருக்கின்றன. இந்தியன்-2 படத்தின் மூலம் என்னை தாத்தா என்று அழைக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. காந்தியை, ஈ.வெ.ரா.,வை கூட தாத்தா என்றுதான் அழைத்தார்கள்.

ஆம், நானும் இப்போது தாத்தாதான். கள்ளச்சாராயத்தை பற்றி பல இடத்தில் கூறியுள்ளேன். எனது கருத்து பற்றி விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான்.

இது உடலுக்கு கெடுதல் என அனைவருமே மனதில் முடிவு செய்ய வேண்டும்.  இதனை அருந்தக் கூடாது, பயன்படுத்தக்கூடாது என்னும் உணர்வு, சிந்தனை பொதுவெளியில் உருவாக வேண்டும்.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அதனால் கள்ளச்சந்தைகள் பெருகும், கள்வர்கள் பெருகுவார்கள்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆன்லைனில் பட்டா, சிட்டா எல்லை வரைபடத்தை பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி?

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை!

சுடுகாட்டில் அடக்கமா? : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு

தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து உயிர் தப்பிய இளைஞர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment