இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு 2001 -ம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். Movie Re-release
இந்த படத்தை பிரபல தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தாலும், அந்த காலகட்டத்தில் ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
கமல் ஹாசனின் ஆளவந்தான் படம் தான் ’கில் பில்’ படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் காட்சிகளுக்கான இன்ஸ்பிரேஷன் என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவின்டின் டாரன்டினோ அவர்களே ஓர் நேர்காணலில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய காலகட்டத்தில் பல ரசிகர்கள் ஆளவந்தான் படத்தை ரீ – ரிலீஸ் செய்யுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ். தாணு அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆளவந்தான் படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் எஸ் தாணு, “ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் தயாராகி கொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆளவந்தான் படம் டிசம்பர் 8 ஆம் தேதி 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “கடவுள் பாதி மிருகம் பாதி” பாடல் இன்று (நவம்பர் 18) மாலை 5.03 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளவந்தான் படத்தின் ரீலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆளவந்தான் படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டனர். Kamalahassan Aalavandhan Movie Re-release
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’7 ஜி ரெயின்போ காலனி 2′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவரா?
அமானுஷ்ய கிராமம்… போராடும் ஆர்யா: தி வில்லேஜ் ட்ரெய்லர் எப்படி?
ரூ. 200 கோடி ஊழலா?: அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்
பாதுகாப்புப் படை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டுதல்!