’இந்தியன் –2’ ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ராம்சரணை வைத்து தெலுங்குப் படம் பண்ணப் போய்விட்டார் டைரக்டர் ஷங்கர்.
ஹீரோ கமல்ஹாசனும் இந்தியன் –2 வைக் கண்டு கொள்ளவில்லை.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரனுக்கும் ஷங்கருக்கும் கமலுக்கும் இடையே பஞ்சாயத்து ஓடி இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாம்.
அதனால் தான் ஆக.17—ஆம் தேதி ஷங்கரின் பிறந்த நாளன்று லைக்காவின் சி.இ.ஓ.தமிழ்க்குமரனும் உதயநிதியின் ரெட்ஜெயண்ட்டின் தயாரிப்பு நிர்வாகியான செண்பகமூர்த்தியும் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளனர்.
மீண்டும் சினிமாவில் காஜல்: இந்தியன் 2ல் தொடர்கிறாரா?
+1
+1
+1
+1
1
+1
+1
+1