நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வந்த ‘ பிக் பாஸ் ‘ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது x தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக தொகுத்து வந்த கமல்ஹாசன், அடுத்த சீசனான 8 ஆவது சீசனில் தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என தனது x தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த தற்காலிக விலகலுக்கு காரணம் தனது அடுத்தடுத்த திரைப்பட வேலைகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தனை நாட்கள் உங்கள் வீட்டிற்குள்ளேயே வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நல்வாய்ப்பு என்றும், மக்களின் பேராதரவிற்கும், அன்பிற்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ இந்தியன் – 2 ‘ திரைப்படம் வரும் 9 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
37 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணி ரத்னம் இணையும். ‘ தக் லைஃப் ‘ , இயக்குநர் நாக் அஸ்வினின் ‘ கல்கி – 2’ , போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்த தயாராகி வரும் நிலையில், மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயரின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘ மனோரதங்கள் ‘ என்கிற வெப் ஆந்தாலஜியில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த வெப் ஆந்தாலாஜி வரும் ஆக.15 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
– ஷா
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
டிஜிட்டல் திண்ணை: பழுப்பது நிச்சயம்… ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!