விக்ரம் பட வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இயக்குனர் ஹெச்.வினோத் KH 233 படம், இயக்குனர் மணிரத்னம் KH 234 படம், தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வினின் கல்கி படத்தில் வில்லன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் KH 233 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி டிரெண்டானது.
இந்த படம் குறித்த மற்றொரு தகவலும் தற்போது சினிமா வட்டாரங்களில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் KH 233 படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” என்று டைட்டில் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதே தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அதன்பிறகு சில காரணத்தினால் அந்த படம் உருவாகவில்லை.
இதேபோல் சில நாட்களுக்கு முன் KH 233 படத்திற்கு “மர்மயோகி” என்று டைட்டில் வைக்க படக் குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது KH 233 படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற டைட்டில் தான் உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடிகர் கமல் ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கமல் – மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படத்தின் டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை!
கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை
P A K vs A F G: சென்னையில் ’1999’ வெற்றியை மீண்டும் எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!
சலார் எமோஜி… 230 அடி கட் அவுட்: பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!