கமல்ஹாசன் பொதுவெளியில் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கவலைப்படாதவர் என்பதுடன் தனக்கு சரி என தோன்றுவதை நடைமுறைப்படுத்துவதை எந்த நிலையிலும் மாற்றிக்கொள்ளாத நடிகர்.
அரசியல் கட்சி தலைவர் என அவரது பயணத்தில் அரசியல்வாதியாக பேசுகிறபோது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறபோது அங்கே நடிகர் கமல்ஹாசனை பார்க்க முடியாது.
அதே போன்று நடிகர், வியாபாரி கமல்ஹாசனிடம் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்கிற அடையாளம், அதன் பாதிப்பு துளியும் இன்றி ஒரு நடிகனுக்குரிய எல்லா குணாம்சங்களும் வெளிப்படும்.
அமெரிக்காவில் கதர் ஆடை வியாபாரம் செய்து வருகிறார். அதற்கான விளம்பர மாடல்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இளமை வழியும் மாடல்களுக்கு இணையாக தனது உடை, ஒப்பனை சமாச்சாரங்களை மாற்றிக்கொண்டு பிளேபாய் கணக்காக போட்டோசூட்டில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனுக்கு 68வயது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு, தன்னுடைய உடலையும்…மனதையும் இளமையாக போட்டோசூட்டில் வெளிப்படுத்தியுள்ளார் கமல்.
சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது, ‘தேவர் மகன்’ கெட்டப்பில் எடுத்து கொண்ட போட்டோ வைரலான நிலையில், இப்போது அதையும் மிஞ்சும் அளவிற்கு சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆண்டவர் 3அழகிகளுடன்…ஜாலியாக சிரித்தபடி அட்ராசிட்டி செய்த புகைப்படங்கள் தான் இவை என அவரது ரசிகர்கள் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மாடல்கள் மீது சாய்ந்தபடி, கமல் கொடுத்துள்ள போஸை பார்த்தால்… அவர் இன்றும்… இளமை இதோ…இதோ…பாடல்கள் வெளிவந்த அதே காலத்தில் தான் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதோடு…உங்களுக்கு 68வயது என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்து வருகிறார்கள்.
சினிமாவில் பல வேடங்களில் நடிகர்கள் நடிப்பது கதைக்காக நிஜவாழ்வில் தொழில்முறையில் பல்வேறு வேடங்களில் நடிக்க கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்கின்றனர் அவரது கட்சியினரும், ரசிகர்களும்.
இராமானுஜம்
ராகுலை அழவைத்த யாத்திரை கணேசன்
அடாத மழையிலும் விடாது பணி: மு.க.ஸ்டாலின்