Kamal Haasan's Guna is re-release

ரீ ரிலீஸாகும் கமல்ஹாசனின் குணா!

சினிமா

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை புதிய படம் போன்று திரையரங்குகளில் வெளியிடுவது அதிகரித்து வருகின்றது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே அவ்வப்போது குறிப்பிட்ட நகரங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் ஆகியோர் நடித்த படங்களில் குறிப்பிட்ட சில படங்களை மறு வெளியீடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி, அஜீத்குமார் நடிப்பில் வெளியான பில்லா, கடந்த வாரம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியானது.

வெற்றி பெற்ற படங்கள் மட்டும் என்று இருந்த சூழலில் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெறாத குணா ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப் போவதாக அந்தப் படத்தின் நெகட்டிவ் உரிமை பெற்றுள்ள பிரமிட் குரூப் அறிவித்துள்ளது.

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.

சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறையினரும் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு, தமிழ்படங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்தது.

200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே.

குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் அந்தபடத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இன்றைய தலைமுறை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி.

Kamal Haasan's Guna is re-release

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் லெனின் – வி.டி.விஜயன் படத்தொகுப்பில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில்,

கமல்ஹாசன், ரோஷினி, ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ்.வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்து இருந்தனர்.

வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

share market: பிரதமர் வீடு கட்டும் திட்டம்… சிமெண்ட் பங்குகள் உயர்வு!

தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு : தலைமறைவான உதவியாளர் கைது!

பயன்பாட்டுக்கு வந்த திருச்சி புதிய விமான முனையம் : விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாம் தமிழர் தனித்து போட்டி!

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *