Kamal Haasan's 237th Movie

கமலின் 237 வது படத்தை இயக்கும் பிரபல ஆக்‌ஷன் டைரக்டர்ஸ்!

சினிமா

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் KH233, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் கமல் மணி ரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். KH 234 படத்திற்கு ‘Thug Life’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கமலின் 237 வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. விக்ரம், லியோ, கே ஜி எப், சலார் போன்ற பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்கள் இரட்டை சகோதரர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி).

இவர்கள் தற்போது மணிரத்தினம் கமல் கூட்டணியில் உருவாகும் தக்கலைப் படத்திற்கும் சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கமல்ஹாசனின் 237 வது படத்தை இயக்க உள்ளனர். அன்பறிவ் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கப் போவதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. அந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது அன்பறிவ் முதல் படத்திலேயே கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

Thug Life (KH 234) படத்திற்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் கமல் நடிக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கான பணிகள் எதுவும் தொடங்கப்பட வில்லை. அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்: அரசாணை வெளியானது!

அயலான்ல தனுஷா? : அப்டேட் குமாரு

ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல… ஆனால்… : ஐகோர்ட்டு கருத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *