கமல் லிங்குசாமி இணையும் புதிய படம்?

சினிமா

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வந்தது திருப்பதி பிரதர்ஸ்.

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளியான தீபாவளி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான திருப்பதி பிரதர்ஸ், கார்த்தி நடிப்பில் பையா, கோலிசோடா,

விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி, வழக்கு எண்18/9, ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை, சதுரங்கவேட்டை, வேட்டை, சூர்யா நடித்த அஞ்சான் என குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்தது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி அவர் அடுத்தடுத்து நடித்த படங்களின் வியாபார மதிப்பு அதிகரிக்க காரணமான ரஜினிமுருகன் படத்தை தயரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ்.

கமல்ஹாசன் நாயகனாக நடித்த உத்தமவில்லன் படத்தை தயாரித்ததன் மூலம் மிகப்பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டது திருப்பதி பிரதர்ஸ்.

கமல்ஹாசனின் பரமரசிகரான லிங்குசாமி அவர் நடிக்கும் பக்கா கமர்சியல் படத்தை தயாரிக்க விரும்பினார்.

ஆனால் கமல் புது முயற்சியாக உத்தமவில்லன் படத்தின் கதையை கூறி தயாரியுங்கள் என கூற லிங்குசாமியால் மறுக்க முடியவில்லை.

முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் – திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து உத்தமவில்லன் படம் தயாரிக்கப்பட்டது.

Kamal Haasan Lingusamy join

வெளிநாட்டு விநியோக உரிமையை லிங்குசாமிக்கு கூறாமலே வியாபாரத்தை கமலே விற்பனை செய்து விட்டார் என பட வெளியீட்டின்போது பிரச்சினை உருவானது.

இதனால் படம் ஒரு நாள் தாமதமாக வெளியானது. கமல்ஹாசன் விருப்பப்பட்ட கதையை எடுப்பதால் வணிகரீதியாக நஷ்டம் ஏற்பட்டால் அடுத்து ஒரு படம் தயாரிக்க கால்ஷீட் தருவதாக அவர் கொடுத்த உறுதி மொழிப்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல் எழுத்து மூலமாக கடிதம் கொடுத்து இருந்தார்.

விக்ரம் வெற்றிக்கு பின் கமல்ஹாசனின் வணிக மதிப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் ஏற்கனவே கமல் கொடுத்த வாக்குறுதிப்படி தங்கள் நிறுவன தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சென்னையில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருந்தார்.

அடுத்தடுத்து படங்களில் நடிப்பதிலும், புதிய படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் கமல் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிப்பது சாத்தியமா என சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது,

உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது கமல்ஹாசன் எழுத்துமூலமாக கொடுத்த ஒப்புதல் அடிப்படையில் அவர் நடித்து கொடுப்பார்” என்றதுடன், “அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் லிங்குசாமி தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

பொங்கல் வாரத்தில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வரக் கூடும் சினிமாவை நேசிக்கும் கமல்ஹாசனும் – லிங்குசாமியும் அதற்காக நிறைய இழப்புக்களை எதிர்கொண்டவர்கள். அதனால் இருவரது கூட்டணியில் படம் தயாரிப்பார்கள்” என்றனர்.

இராமானுஜம்

சென்னையில் ஜல்லிக்கட்டு : கமல் திட்டம்!

புதுக்கோட்டை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்?-சீமான்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *