ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், லைகா புரொடெக்ஷன் கோரிக்கையை ஏற்று இன்று ஒருநாள் மட்டும் இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் குதிரையில் வந்து கூல் சுரேஷ் படம் பார்த்தார். அதேபோல சென்னை சத்யம் திரையரங்கில் இந்தியன் 2 திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் கண்டுகளித்தார். அவருடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் படத்தை பார்த்தார்.
இந்தநிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. ரசிகர்களின் விமர்சனங்கள் பார்க்கலாம்…
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
68வது பிலிம்பேர் விருதுகள்: கமல் முதல் தனுஷ் வரை… வென்றது யார்?