அமிதாப் பச்சன், பிரபாஸ் நடித்து வரும் புதிய படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் புராஜெக்ட் கே. பான் இந்தியா படமாக ரூ.400 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில், பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் இணையவுள்ளார் என்றும் இந்த படத்துக்காக கமல் 20 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருந்ததாகவும் கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 25) புராஜெக்ட் கே படத்தில் கமல் இணைய உள்ளதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.
‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் புரமோ வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுடன் படம் நடிக்க இருப்பது பற்றி அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடன் மீண்டும் பணியாற்றுவது அருமையாக இருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு உங்களுடன் இணைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சினிமாவின் கடவுள் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன். கனவு நனவாகிய தருணம். அவருடன் இணைந்து சினிமாவை கற்று வளரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பிரியா
ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு சிறப்பு பதக்கம் அறிவிப்பு
“டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்க வேண்டும்” – ரவி சாஸ்திரி