மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாஸனின் 70வது பிறந்த நாளையொட்டி இன்று (நவம்பர் 7) அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாஸனின் தொண்டு சிறக்க விழைகிறேன்.
பினராயி விஜயன்
என் இனிய நண்பர் கமல்ஹாஸனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சினிமாவின் அடையாளமாகவும், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக விழுமியங்களுகாக போராடுவதன் மூலம் நமது இதயங்களில் கமல் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
கேரளா மற்றும் கேரள மக்கள் மீதான அவரது அபிமானம் ஊக்கமளிக்கிறது. அவர் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள்.
சிவகார்த்திகேயன்
‘அமரன்’ படத்தின் கமாண்டிங் ஆபிஸர் கமல்ஹாஸன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ‘அமரன்’ படத்தை தயாரித்ததற்கு மிக்க நன்றி.
ஸ்ருதி ஹாஸன்
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் ஒரு அரிதான மனிதர், உங்களுடன் நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் அனைத்து கனவுகளும் நனவாகட்டும். லவ் யூ சோ மச் அப்பா.
மோகன் லால்
பிறந்த நாள் வாழ்த்துகள் கமல்ஹாஸன் சார். இந்த வருடம் உங்களுக்கு மேன்மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்.
ராதிகா
பிறந்த நாள் வாழ்த்துகள். உடல் நலத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?
ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வரும் வீரர்கள் முழு விவரம் : யார் யாருக்கு டிமாண்ட்!
’குளத்தில் மட்டுமல்ல… ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரும்’ : சேகர்பாபுவுக்கு தமிழிசை பதில்!