நடிகர் கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 22) இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் 2019ஆம் ஆண்டு தொடங்கினார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வந்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.

இந்தநிலையில், கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியானதும் ஆகஸ்ட் 24ஆம் தேதி, சென்னையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் அல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது.
ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் படத்தில் நடித்து வந்தனர். தற்போது, கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் காட்சிகள் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் நடிகர் கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 22) படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த புகைப்படங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் சென்னை சாலிகிராமத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
செல்வம்
கமல் இல்லாமல் பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு!
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ராஜா