கமல் தயாரிப்பில் சிம்பு

சினிமா

பத்துதல படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவது, இயக்கப்போவது யார் என்கிற தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. 

பத்துதல படத்திற்கான டப்பிங் பேசாமலே பாங்காங் சென்ற சிலம்பரசனை படக்குழு அழைத்தும் அவர் வரவில்லை. வேறுவழியின்றி பாங்காங்கிலேயே பத்துதல படத்திற்கான டப்பிங்கை சிலம்பரசன் பேசிமுடிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிக்க விரும்பிய கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், உதயநிதி நடிக்கும் படங்களை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். உதயநிதி தமிழ்நாடு அமைச்சர் ஆனதால் அந்தப்படம் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய முன்னணி நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்தார் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளை பாங்காங்கில் இருக்கும் சிலம்பரசனை ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் மகேந்திரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருவரும் நேரில் சந்தித்து நடத்தினர்.

பின் நேற்று புதிய பட அறிவிப்பு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் வெளியிடப்பட்டது.

தற்போது ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை இயக்குகிறார். 2024ல் படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

“சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டு பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 

“என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்

வேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி அறிவிப்பு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.