பகுத்தறிவாளராக, பெரியாரின் கொள்கைகள் மேல் நம்பிக்கை கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.
இதுவரை இல்லாத வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்தல், பட்டு வேட்டிகட்டியிருப்பது போன்ற புதிய புகைப்படங்களை அவர் தரப்பில் பொதுவெளியில் வெளியிட்டிருந்தனர்.
இது சம்பந்தமான வாத பிரதிவாதங்கள் இன்னமும் தொடர்கின்றன.
2022ம் ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்று ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தில் பெரும் சாதனை படைத்த படமாக விளங்கியது. 480 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ்த் திரையுலகில் சாதனைகளை முறியடித்தது.

ரசிகர்களால் ‘தரமான’ ஒரு படம் என பாராட்டப்பட்ட ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீது இந்தியத் திரையுலகத்தின் பார்வை விழுந்துள்ளது. தெலுங்கு, இந்தி என பல மொழி ஹீரோக்களும் அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தகவல். இதனிடையே ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

அடுத்து விஜய்யின் 67வது படம், ‘கைதி 2’ ஆகிய படங்களை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் தீபாவளி தினத்தில் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.
அது பற்றிய புகைப்படத்தை அவர் பதிவிடாமல் லோகேஷின் நெருங்கிய நண்பரும், இயக்குனரும், ‘விக்ரம்’ படத்திற்கு லோகேஷுடன் இணைந்து வசனம் எழுதிய ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ், கமல்ஹாசன் சந்தித்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “தீபாவளி எப்படி போச்சுடான்னு கேட்டால், இந்த போட்டோ காமிச்சான்… என்றென்றும் ஊக்கமளிக்கும் பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமலின் இந்த பட்டு வேட்டி சட்டை கொண்டாட்டம் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்துக்கான அச்சாரமா என்ற விவாதங்கள் கிளம்பிவிட்டன.
இராமானுஜம்
ரூசோவ் முதல் சதம்: வங்கதேசத்தை நசுக்கிய தென்னாப்பிரிக்கா
தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? – தனிநபர் யாகம் நடத்த உயர் நீதிமன்றம் தடை!