‘கல்கி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

Published On:

| By Minnambalam Login1

kalki netflix prime

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து ஜூன் மாதம் வெளியான ‘ கல்கி ‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா படாணி, சோபனா, ஆனா பென் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான திரைப்படம் ‘கல்கி ‘.

இந்தத் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை பான் இந்திய அளவில் படைத்தது. 2898 ஆம் ஆண்டில் நடப்பதாய் உள்ள கதைக்களத்தில் மகாபாரதம் போன்ற இதிகாசக் கதையைக் கலந்து படைத்திருந்தார் நாக் அஷ்வின்.

இந்த நிலையில் இந்தத் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி இந்தியில் வெளியாகும் எனவும் அதே தேதியில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் நாக் அஸ்வின் பேசுகையில், “எங்களின் ‘ கல்கி ‘ திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி தளத்தில் வெளியிடும் போது, அதை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் நம்பிக்கை போன்றவற்றை பேசியுள்ள எங்கள் திரைப்படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்” என்று தெரிவித்தார்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஆவணி மாத நட்சத்திர பலன் -மகம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

என்ன அழகு எத்தனை அழகு… மாடல்களுக்கு சவால் விட்ட சர்ச்சை குத்துச்சண்டை வீராங்கனை!

யு/ஏ சான்றிதழ் கிடைச்சாச்சு… ரிலீஸுக்கு ரெடியாகும் ‘வணங்கான்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share