கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ.415 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.
இந்த வருடம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மகாபாராத கதையின் கருவை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கல்கி படத்தின் மேக்கிங் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். கல்கி பார்ட் 2-க்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று நேற்று (ஜூன் 29) தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், கல்கி படம் வெளியாகி மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.415 கோடி வசூல் செய்துள்ளதாக, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் நாட்களில் அதிக வசூலை குவித்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கல்கி இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் அப்டேட்!