பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் உலக அளவில் பிரபலமாகிவிட்டார்.
அடுத்தடுத்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போக,
அதன் பிறகு கேஜிஎப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
சலார் படத்தை தொடர்ந்து நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான “மகாநதி” படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் “கல்கி 2898 AD”.
இந்த படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கல்கி 2898 AD படத்தின் Glimpse வீடியோவில் 2898 காலகட்டத்தில் வாழும் மக்கள் வில்லன் ஆட்சியில் சிக்கி தவிப்பதும், போராட்டம் செய்வதும்,
இந்த கொடூர சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற ஹீரோவிற்காக காத்திருப்பது, போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இந்த படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் என்றும் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கல்கி படத்தின் 2 மிக முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்து மூன்றாவது ஆக புஜ்ஜி என்ற முக்கிய கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
கல்கி 2898AD படத்தில் புஜ்ஜி என்று பெயரிடப்பட்டுள்ள கதாபாத்திரம் ஒரு ரோபோட்.
இந்த படம் முழுக்க ஹீரோ பிரபாஸுக்கு ஒரு நல்ல நண்பனாக உதவியாளனாக இந்த புஜ்ஜி ரோபோட் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஜ்ஜி ரோபோட்டின் அறிமுக வீடியோவில், புஜ்ஜி சொல்லும் அறிவுரைகளை கேட்டு பிரபாஸ் சில விஷயங்களை செய்வது போலவும் சில நேரங்களில் கடுப்பாகி புஜ்ஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மார்வெல்லின் அயன் மேன் திரைப்படத்தில் அயன் மேன் கதாபாத்திரத்திற்கு ஜார்விஸ் என்ற AI உதவி செய்வது போல், கல்கி 2898 AD படத்தில் பைரவா கதாபாத்திரத்திற்கு புஜ்ஜி உதவி செய்கிறது.
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் கல்கி திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயமுறுத்தும் பேய்த்தனத்தைக் காட்டிய ‘டிமான்டி காலனி’!
காதல் …மனம் திறந்த VJ அர்ச்சனா
IPL-இல் யாரும் செய்யாத சாதனையை செய்த விராட் கோலி
இந்தியன் 2 ஆடியோ லான்ச் கெஸ்ட் இவரா..?
வேலைவாய்ப்பு : சென்னை ஐசிஎஃப் ஆலையில் பணி!