இந்து கடவுள்களை அவமானப்படுத்துவதாக லீனா மணிமேகலை மீது அடுக்கடுக்கான புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர், தாம்பரம் காவல் ஆணையாளர் மற்றும் சேலையூர் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர் வாராகி புகார் அளித்துள்ளார்.
ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை ஜூலை 2ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்து தெய்வமான காளி புகைபிடிப்பது போன்ற போஸ்ட்டரை பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக லீனா மணிமேகலை மீது கடந்த ஜூலை 4ஆம் தேதி டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகாரைப் பதிவு செய்தார்.
அதேபோன்று, டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் லீனா மணிமேகலை மீது ஐபிசி 153ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர் வாராகி புகார் அளித்துள்ளார். அதில், இந்து தெய்வங்களை அவமானப்படுத்தும் வகையில் காளி போஸ்டர் இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘லீனா மணிமேகலை படிக்கிறேன் என்ற பெயரில் கனடா நாட்டுக்குச் சென்று தொடர்ந்து இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருவதாகவும், அது கருத்துச் சுதந்திரம் என்றும் கூறி வருகிறார். இது போன்ற பதிவுகள் பெரும்பான்மை இந்து மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையிலும் இருக்கிறது. அவர் மீது பல வழக்கு பதிப்பு செய்யப்பட்டுக் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அவர் மீண்டும் இந்து தெய்வங்களை சமூக வலைதள பதிவுகள் மூலம் அவமானப்படுத்தி வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மூலம் இந்த புகாரை அனுப்பியுள்ளார் வாராகி
போபால் காவல் துறை கடந்த ஜூலை 7ஆம் தேதி லீனா மணிமேகலைக்கு எதிராக லுக் அவுட் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
eriacta learn – sildigra legend forzest goblin