கலகலப்பு 3 : ரெடியான சுந்தர் சி… ஹீரோயின் யார் தெரியுமா?

Published On:

| By indhu

சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் 100 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் முதல் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க இருப்பதாக சுந்தர் சி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் இது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 25 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கலகலப்பு 2 படம் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

கலகலப்பு படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் Mirchi சிவா ஆகிய இருவரும் கலகலப்பு 3 படத்தில் ஹீரோக்களாக நடிக்க இருப்பதாக சுந்தர் சி தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கலகலப்பு 3 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தெய்வமகள் சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். சீரியலை தொடர்ந்து ஓ மை கடவுளே, மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, மகான் போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில், தற்போது கலகலப்பு 3 படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் வாணி போஜனுக்கு சினிமாவில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், சுந்தர் சி-யின் கலகலப்பு 3 படம் வாணி போஜனுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!