மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை கருத்தில் கொண்டு கலைஞர் 100 நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாக உள்ளார்கள்.
மேலும், முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள்.
இவைகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 24 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL2024: வெயிட்ட கொறைக்க சொல்லுங்க ஐபிஎல்க்கு எடுத்துக்கிறேன்… யாரை சொன்னாரு தோனி?