மீண்டும் சினிமாவில் காஜல்: இந்தியன் 2ல் தொடர்கிறாரா?

Published On:

| By Monisha

இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிப்பதன் மூலம், நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவுக்கு திரும்புவதை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

பணிக்கு திரும்பும் காஜல்

காஜல் அகர்வால் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் 2021 முதல் திரைப்படங்கள், விளம்பரங்களில் நடிப்பதில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டார். தற்போது இடைவேளைக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்ப இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் மாடல் ’நேஹா துப்பியாவிடம்’ பேசிக் கொண்டிருக்கும் போது இதனை அவர் உறுதிப்படுத்தினார். “ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் நான் இன்னும் ஒரு பகுதியாக தான் இருக்கிறேன். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும்” என்று காஜல் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜால் அகர்வால், குரு சோமசுந்தரம், நெடுமுடி வேணு ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பிப்ரவரி 2020ல் ஏற்பட்ட எதிர்பாராத கிரேன் விபத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் விக்ரம் படத்தில் கவனம் செலுத்தி படமும் வெளியாகி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

மோனிஷா

கார்த்தியும் தேசிய விருது பெறுவார் : சூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel