அம்மான்னா சும்மா இல்லடா..இந்த ஆண்டு அம்மாவான நடிகைகளின் லிஸ்ட்!

சினிமா

2022 ஆம் ஆண்டு விடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு அம்மாவான நடிகைகள் யார் யார் என்று இங்கே பார்க்கலாம்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு தனது ஆண் நண்பரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர்வைத்துள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு பிறகும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா

நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

kajal aggarwal namitha nayanthara

இதையடுத்து,அக்டோபர் 9 ஆம் தேதி “நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது” என பதிவிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் விக்னேஷ் சிவன்.

நமிதா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை நமிதா, 2017 ஆம் ஆண்டு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

kajal aggarwal namitha nayanthara

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டோஷூட் மூலம் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயான நமிதா தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர்கள் வைத்துள்ளார்.

பிரணிதா

நடிகை பிரணிதா உதயம், சகுனி , மாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

kajal aggarwal namitha nayanthara

தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர், கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதையடுத்து, ஜூன் மாதம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆலியா பட்

பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் ஆன இரண்டே மாதத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டார் ஆலியா. இதையடுத்து நவம்பர் மாதம் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.

kajal aggarwal namitha nayanthara

குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவல் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”எங்கள் வாழ்க்கையின் அற்புதமான செய்தி இது. ஒரு மேஜிக்கல் பெண் குழந்தை அவள்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அலகுமலை ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்: கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.