2004ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்,
அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வருட புத்தாண்டு தினத்தில்தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார், இவருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறுமாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை.
பயந்து கொண்டிருந்த இளம்பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக்கற்றுக்கொண்டேன்.

நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது.
ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நினைக்கவே இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் தனது மகனின் முகத்தை பொதுவெளிக்கு காட்டவில்லை.
இந்நிலையில், தற்போது குழந்தையின் முகம் முழுவதுமாக தெரியும்படியான ஃபோட்டோவுடன் வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் காஜலுடன் அவரது கணவரும் இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் பையன் இவ்வளவு அழாக என்றும் உங்களை போலவே உங்கள் மகனும் பேரழகு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்