தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தான் காஜலின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற, இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் கதாநாயகியாக மாறிவிட்டார் காஜல்.
இடையில் கல்யாணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த காஜல், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 2 படம் தயாராகி கொண்டிருக்கிறது. மேலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடன் காஜல் நடித்துள்ள பகவந் கேசரி சத்யபாமா படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் காஜல் அகர்வால் மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க போகிறார் என சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஓர் பிரம்மாண்டமான புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபுவிற்கு வில்லியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வில்லி கதாபாத்திரத்திற்காக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டதால், தற்போது அந்த வாய்ப்பு நடிகை காஜல் அகர்வாலுக்கு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.1 லட்சம் வங்கி மோசடி…. நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதிமாறன் கேள்வி!