பம்பாய் திரைப்படத்தில் வெளியாகி இளைஞர்களை கவர்ந்த ”ஹம்மா ஹம்மா ” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே.
இவர் 2018-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை நம்மைப் பந்தாடிவிடுகிறது. எனக்கு கேன்சர் உச்சக்கட்டத்தில் இருப்பது உறுதியாகிவிட்டது.
வலிக்காக மேற்கொண்ட பரிசோதனையில் எதிர்பாராத விதமாக கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டது. என்னைச் சுற்றிலும் எனக்கு உதவி செய்வதற்காக, குடும்பத்தாரும் நண்பர்களும் சூழ்ந்து நிற்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்” எனப் பதிவிட்டு இருந்தார்.
அதன் பிறகு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக நியூயார்க் சென்றார். பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு, சிகிச்சைகள் முடிந்து இப்போது நலமுடம் இருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் பாலிவுட் பபிள் ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில், சோனாலி பிந்த்ரே புற்று நோயை எதிர்த்து தான் நடத்திய போராட்டத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.
“மருத்துவர்கள் நான் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் 30 சதவிகிதம் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்தனர். என்னுடைய சமூக வலைதளப் பதிவால் கேன்சர் குறித்த சோதனை எண்ணிக்கை அதிகரித்தது. பலர் தங்களை பரிசோதித்துக்கொண்டனர்” என்று கூறியுள்ளார் சோனாலி.
பெரும் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்து இப்போது, ‘தி பிராக்கன் நியூஸ்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
அர்ஜூன் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நட்சத்திரம் நகர்கிறது பாடல் வெளியீடு!