கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இட்னானி நாயகியாக நடிக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
நேற்று மாலை முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பெயருடன் கூடிய படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பார்வையை பொறுத்தவரை முறுக்கு மீசையுடன், தொடை தெரியும்படி வேட்டியை கட்டிக்கொண்டு நாற்காலியில் திமிராக அமர்ந்திருக்கும் ஆர்யாவின் பின்புறம் ரஜினியின் ‘பாட்சா’ பட புகைப்படம் வரையப்பட்டுள்ளது.
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையா, அதனை தொடர்ந்து இயக்கிய கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் அனைத்தும் இராமநாதபுரம், தேனி, மதுரை ஏரியாவை கதைக்களமாக கொண்டிருந்தது,
குறிப்பாக முக்குலத்தோர் சமூகம் சார்ந்ததாகவே இருந்தது. இதனால் ஜாதியை முன்னிலைபடுத்தும் இயக்குநர் என்கிற விமர்சனம் எழுந்தது. தற்போது ஆர்யா நாயகனாக நடிக்கும் படத்திற்கு முக்குலத்து சமூகத் தலைவராக கொண்டாடப்படும் முத்துராமலிங்கதேவர் பெயரை சுருக்கி அதற்கு முன்னதாக காதர்பாட்சா என்ற முஸ்லிம் சமூகத்தவர் பெயரை இணைத்துள்ளார்.
முத்துராமலிங்கதேவருக்கு முஸ்லிம் பெண்மணி தாய்ப்பால் கொடுத்தார் என்கிற தகவல் கூறப்பட்டுவரும் நிலையில், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் தலைப்பு விவாதத்துக்குரியதாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இராமானுஜம்
நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்களுக்கு கனமழை!
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
ராம்நாட் ச ம உ பெயரே அதுதான். சர்ச்சைக்கு ஒரு மண்ணுங்கிடையாது