மாபியாக்கள் உலகை பற்றி பேசும் ‘கப்ஜா’!

சினிமா

தமிழ் சினிமாவில் அஜித்குமார் விஜய் இருவரும் இணைந்து நடிப்பது போன்றது, கன்னட நடிகர்களான உபேந்திரா – கிச்சா சுதீப் இருவரும் இணைந்து நடிக்கும் கப்ஜா திரைப்படம்.

இந்த படத்தின் டீசர் நேற்று (செப்டம்பர் 18) வெளியாகி இருக்கிறது.

உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார்.

கன்னட மொழியில் கே.ஜி.எஃப்.-1, 2, 777 சார்லி, விக்ராந்த் ரோணா என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் இந்திய திரையுலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது.

அதனால் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில்  வெளியாகிறது.

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் தயாரித்துள்ளது

இந்தப் படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஜெ.ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கே.ஜி.எஃப்.படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

கப்ஜா திரைப்படத்தின் டீசர்,  நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.சந்துரு பேசுகையில், “1947-ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார்.

அவருடைய மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்புதான்  இந்த ‘கப்ஜா’ படம்.

இந்தப் படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச் சம்பவங்களுக்கான சட்ட விரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்” என்றார்.

டீசர் வெளியாகி 24 மணிநேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளது.

இராமானுஜம்

உடம்பை வைத்து கிண்டல் பண்ணாதீங்க : சிம்பு

குல்லா அணிந்த இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல் : வட இந்தியர் கைது!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.