தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!

சினிமா

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றி அதில் நடித்த கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக மாற்றியுள்ளது.

இதனால் இருவரும் அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது படங்களில் இவர்களை எப்படியாவது நடிக்க வைத்து தென்னிந்தியாவிலும் வியாபாரம் பார்க்கும் முயற்சியில் பாலிவுட் திரையுலகமும் போட்டி போட்டு வருகிறது.

சல்மான் கான் படத்தில் ராம்சரண்

நடிகர் ராம்சரண் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநரான ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சல்மான் கான் நடித்து வரும் வீரம் திரைப்படத்தின் ரீமேக்கான ’கிஸி கா பாய், கிஸி கி ஜான்’ திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

junior ntr going to act in bolly wood

அதேவேளையில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனது 30வது படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

இதனையடுத்து கே.ஜி.எஃப் படப்புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

junior ntr going to act in bolly wood

ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர்?

இந்நிலையில் தான் நேரடி பாலிவுட் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் கூட்டணியில் வெளியானது ’வார்’ திரைப்படம்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இப்படம் சுமார் 475 கோடி ரூபாய் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்த பதான் திரைப்படமும் உலகளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து வார் திரைப்படத்தின் 2ம் பாகத்தினை ‘பிரம்மாஸ்திரா’ பட இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவலை அயன் முகர்ஜியோ, யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனமோ இன்னும் வெளியிடவில்லை.

junior ntr going to act in bolly wood

விஜய்சேதுபதி, நயன் தாரா வரிசையில்…

சமீப காலமாக தென்னிந்திய படங்களான ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ’காந்தாரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் பாலிவுட்டிலும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன.

மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் நேரடி ஹிந்தி திரைப்படமான ஜவானில் தென்னிந்திய நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஜூனியர் என்.டி.ஆரும் முதல் முறையாக விரைவில் அறிமுகமாக உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சாதிய பிரச்சனையின் மையக்கதை?: இராவணக் கோட்டம் டிரெய்லர்!

IPL 2023: வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவிய ராஜஸ்தான்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *