இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் தேவரா.
பிரபல தெலுங்கு இயக்குனரான கொரட்டலா சிவாவின் “தேவரா” படத்தை இயக்குகிறார். என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தேவரா படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கல்யாண் ராம், தேவரா படத்தின் கதை Game of Thrones கதையை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார். ஜான்வி கபூரை தொடர்ந்து பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகானும் தேவரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவரா படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். தேவரா படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கடலில் சுறா மீன் உடன் சண்டையிடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது என சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
అందరికీ నూతన సంవత్సర శుభాకాంక్షలు! Wishing you all a very Happy New Year.
Can’t wait for you all to experience the glimpse of #Devara on Jan 8th. pic.twitter.com/RIgwmVA6e0
— Jr NTR (@tarak9999) January 1, 2024
மேலும் தேவரா படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா அறிவித்தார். இந்நிலையில், தேவரா முதல் பாகத்தின் க்ளிம்ஸ் வீடியோ வரும் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில் கடல் நடுவில் மிதக்கும் படகில் ஜூனியர் என்டிஆர் மாஸ் ஆக நிற்கும் போஸ் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேவரா படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
விரைவில் வெளியாகும் Vivo Y28 5G: சிறப்பம்சங்கள் என்ன?
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!