500 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ‘தேவரா’

சினிமா

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படம் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ், சைஃப் அலி கான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

யுசவதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக தேவரா வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தநிலையில், சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஜூனியர் என்.டி.ஆர் பேசும்போது, “ஆடியன்ஸ் தற்போது நெகட்டிவாக மாறிவிட்டார்கள். முன்பு போல் ஒரு படத்தை அப்படியே ரசிப்பதில்லை. ஒவ்வொரு படத்தையும் அலசி ஆராய்ந்து நிறைய குழப்பிக்கொள்கிறார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருந்தார்.

தேவரா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் தொடர்ந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.

படம் வெளியாகி 16 நாட்களில் உலகம் முழுவதும் 509 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பருவமழை: ரெடியா இருங்க… திமுக மா.செ-க்களுக்கு பறந்த உத்தரவு!

ஜிக்ரா: விமர்சனம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0