junior balaiah passed away today november 2 2023

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

சினிமா

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 2) காலமானார்.

பழம்பெரும் நடிகரான டி.எஸ்.பாலையாவின் மகன் ரகு பாலையா (70). சினிமாவில் அறிமுகமான பிறகு தனது பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்டார்.

கமல் நடிப்பில் வெளிவந்த மேல்நாட்டு மருமகள் படத்தில் அறிமுகமான ஜூனியர் பாலையாவிற்கு இரண்டாவது படத்திலேயே சிவாஜி உடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

சிவாஜியின் தியாகம், கமலின் வாழ்வே மாயம், கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சங்கமம், வின்னர், சின்னத்தாயி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜூனியர் பாலையா மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!

மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *