Jr NTR Janhvi Kapoor's Devara

ஜூனியர் என்டிஆரின் “தேவரா”: பார்ட் 2 அப்டேட் கொடுத்த இயக்குநர்

சினிமா

இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார்.

ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பிறகு எந்த இயக்குனருடன் நடிகர் ஜூனியர் என்டிஆர் இணைந்து பணியாற்றப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்,

பிரபல தெலுங்கு இயக்குனரான கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் “தேவரா” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி, தற்போது தேவரா படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

ஜான்வி கபூரை தொடர்ந்து பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகானும் தேவரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேவரா படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கின்றார்.

சமீபத்தில் தேவரா படத்தின் கான்செப்டை வைத்து AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஜூனியர் என்டிஆரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தேவரா படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சுறா மீன் உடன் சண்டையிடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது தேவரா படம் குறித்த ஓர் முக்கிய அப்டேட்டை இயக்குனர் கொரட்டலா சிவா ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், தேவரா படத்தின் கதையை நான் சொன்ன உடனே ஜூனியர் என்டிஆர் உட்பட அனைவரும் அதிக எக்சைட் ஆகிவிட்டனர். அதற்குக் காரணம் அந்த படத்தின் கதைக்கான உலகம் மிகவும் பிரம்மாண்டமானது.

இந்த கதையில் நிறைய அழுத்தமான கதாபாத்திரங்களும் உள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய பின் ஒவ்வொரு நாளும் தேவரா படத்தின் அந்த உலகம் எதிர்பார்த்ததை விட பெரிதாக மாறியது.

இரண்டு, மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, படத்தை பார்க்கும்போது முன்பை விட அதிகமாக எக்சைட் ஆகிவிட்டோம்.

தேவரா படத்தில் உள்ள சில ஆழமான காட்சிகளையும் வசனங்களையும் குறைத்து ஒரு படமாக கொடுப்பதை விட,

இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழத்தையும் விரிவாக காட்ட வேண்டும் என்று எண்ணி ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.

தேவரா படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

தேவரா படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று இயக்குனர் கூறியதும் இயக்குனரின் வீடியோவை பகிர்ந்து ஃபயர் விட தொடங்கிவிட்டனர் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராம் சரண் – தோனி சந்திப்பு: ஸ்மார்ட் ஆன கேப்டன் கூல்!

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்: கூட்டணி முடிவுகள் வெளியாகுமா?

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0