யோகிபாபுவிடம் அப்படி நடந்தாரா அஜித்? – உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர்

சினிமா

நடிகர் அஜித்குமார் பற்றி நெகட்டிவான செய்திகளை கேட்பது அரிது. சமீபத்தில் அவரை பற்றிய நெகட்டிவ் செய்தி ஒன்று வலைதளங்களில் பரவி வந்தது.

அதாவது,  படபிடிப்பின் போது, நடிகர் அஜித்குமாரின் கையை நகைச்சுவை நடிகர் யோகி பாபு தொடுவது போன்ற சீன் அமைக்கப்பட்டதாகவும்,  அப்போது, நடிகர் அஜித்குமார் டோன்ட் டச் என்று சொன்னதாகவும்  செய்தி பரவியது.

இதையடுத்து, அஜித்குமார் பற்றிய இந்த செய்திக்கு யோகி பாபு உடனடியாக மறுப்பு தெரிவித்ததோடு,  தன்னை அஜித்குமார் புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படத்தை யோகி பாபு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  இணையத்தில் இந்த செய்தி பரவியதையடுத்து, நடிகர் அஜித்குமார் பற்றி பத்திரிகையாளர் சோமு சில கருத்துகளை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “அஜீத் அப்படிப்பட்டவர் அல்ல என்பது ஊடகத்துறையினர் அனைவருக்கும் தெரியும். இதற்கு நான் நேரடியாக பார்த்த இரு சம்பவங்களைச் சொல்லலாம்.என் மூத்த சகோதரன் போன்ற  சினிமா பத்திரிகையாளர் சந்துரு,  நோயுற்று மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார். உடல் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. தகவல் அறிந்து உடனடியாக அஜித்குமார் சந்துருவின் வீட்டுக்கு வந்து விட்டார்.  மாடியில் வீடு உள்ள சந்துருவின் வீட்டுக்கு உடலை தூக்கி செல்ல முதலில் தோள் கொடுத்தவர் நடிகர் அஜித்குமார்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு சம்பவத்தையும் பத்திரிகையாளர் சோமு பகிர்ந்துள்ளார். ”அஜித் – ஷாலினி திருமணம் நடந்த சில நாள்களுக்கு பிறகு, நட்சத்திர ஓட்டலில் சினிமா செய்தியாளர்களுக்கு விருந்து வைத்தார். அஜித் – ஷாலினி புதுமணத் தம்பதியினர் அனைவரையும் உபசரித்தனர். அப்போது சர்வர் ஒருவர், தயங்கித் தயங்கி அஜித்திடம் வந்து நின்றார். அஜித் என்னவென்று விசாரிக்க… உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார். உடனே அங்கு சாப்பிடாமல் பேசிக்கொண்டு இருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை அழைத்து அஜித் படம் எடுக்கச் சொன்னார். அதோடு, சர்வரின் முகவரியை புகைப்படக் கலைஞரிடம் கொடுக்கச் சொன்னார். புகைப்படக் கலைஞரிடம் அவர் மறுத்தும் பணம் கொடுத்து, “படத்தை அவருக்கு மறக்காம அனுப்புங்க” என்றும் அஜித் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட அஜித்குமார் அப்படி நடந்து கொண்டிருப்பரா? என்று பத்திரிகையாளர் சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“முதலீட்டுக்கான ஒரே சாய்ஸ் தமிழ்நாடு” – அமெரிக்காவில் தமிழில் முழங்கிய ஸ்டாலின்

ஃபார்முலா 4 கார் ரேஸ் : சென்னை போக்குவரத்தில் 3 நாட்களுக்கு முக்கிய மாற்றங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0