ஜோஷ்வா ‘இமை போல் காக்க’ எப்படி இருக்கிறது? – ரசிகர்கள் விமர்சனம்!

Published On:

| By Manjula

Joshua Imai Pol Kaakha movie fans reactions

தமிழின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராஹி, திவ்யதர்ஷினி ஆகியோர் நடிப்பில் இன்று (மார்ச் 1) வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா – இமை போல் காக்க’. Joshua Imai Pol Kaakha movie fans reactions

கொலைகார கும்பலிடம் சிக்கித்தவிக்கும் நாயகியை காப்பாற்ற களமிறங்குகிறார் நாயகன் ஜோஷ்வா. இந்த கும்பலின் பின்னணி என்ன? நாயகன், நாயகியை சிக்கலின்றி காப்பற்றினாரா? என்பதை தோட்டாக்கள் தெறிக்க, தெறிக்க சொல்லி இருக்கிறது இப்படம். பல்வேறு தடைகளுக்கு பிறகு இன்று வெளியாகியிருக்கும் ‘ஜோஷ்வா’ ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

Joshua Imai Pol Kaakha movie fans reactions

சித்தார்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், ” பாடிகார்டு – வாடிக்கையாளர் தப்பிக்கும் கதையினை கௌதம் வாசுதேவ் மேனன் அளித்திருக்கிறார். அதிரடி காட்சிகள் தனித்து தெரிகின்றன. வருண் நன்றாக நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும் அசத்தி உள்ளார். கதை ஓகே தான். ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஏற்ற படம்,” என ஒரு நீளமான விமர்சனத்தினை அளித்துள்ளார்.

அனிருத் ஸ்ரீராம் என்னும் ரசிகர், ”வழக்கமான கதை தான். ஆக்ஷன் காட்சிகள் பயங்கரமாக இருந்தன. படத்தின் முதல் பாதி சுமார். 2-வது பாதி நன்றாக இருந்தது. மொத்தத்தில் ஒருமுறை பார்க்கலாம்,” என கூறியிருக்கிறார்.

”படத்தின் முதல்  பாதி சுமாராக தான் இருந்தது” என ஓபனாக சக்திமுத்து என்னும் ரசிகர் தெரிவித்து இருக்கிறார்.

சினிபில் என்னும் பெயரில் ரசிகர் ஒருவர், ” வலுவில்லாத திரைக்கதை. பொருத்தமில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆக்ஷனில் ஸ்கோர் செய்யும் வருண் கெமிஸ்ட்ரியில் சொதப்பி விடுகிறார். மொத்தத்தில் ஒரு முழுமையான படமாக உணர முடியவில்லை,” என கருத்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/WandererUser/status/1763437733366874226

ஒட்டுமொத்தமாக வருணின் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் – வருணின் ஜோஷ்வா இமை போல் காக்க – ஆக்ஷன் விரும்பிகளுக்கானது!

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’அதை தவிர வேறு எந்த பலனும் இல்லை’ : அமீர் விளக்கம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து… இதுதான் பின்னணி!

Joshua Imai Pol Kaakha movie fans reactions

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel