காங்கிரஸ் கட்சியில் இணைகிறேனா? – த்ரிஷா சொன்ன பதில்!

சினிமா

காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்பதில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

லைகா தயாரிப்பில் நடிகை த்ரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, ராங்கி திரைப்படத்தில் தையல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ராங்கி பட கதாபாத்திரம் போல்டானது. இந்த கதை ஒரு சின்ன ஃபேமிலி பிரச்சனையில் இருந்து ஆரம்பமாகி பயணிக்கும்.

மேக்கப் போடாமல் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். 96 படத்தில் நான் மேக்கப் போடாமல் தான் நடித்தேன்.

இந்த கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டால் அது நல்லா இருக்காது. இது ஒரு செய்தியாளர் கதாபாத்திரம் அவர்கள் அதிகமாக மேக்கப் போட மாட்டார்கள்.

Joining the Congress Party Trishas answer

நடிகர் விஜய் ஆதி படத்தில் மாமா மாமா என்று துரத்தி கொண்டே இருப்பீர்கள் அந்த படத்தில் கொலை கூட செய்வீர்கள் அதன் பின்னர் அது போன்ற ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நெகட்டிவ் ரோல் அந்த படத்திற்கு ஏற்றது போல் அமைந்தால் நடிப்பேன் என்று பதிலளித்தார்.

நடிகர்களுக்கு சரிசமமாக நடிகைகளுக்கும் கட்டவுட்டுகள் வைக்கிறார்கள், பாலபிஷேகம் செய்கிறார்கள் இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த த்ரிஷா, சமீபத்தில் நயன்தாராவுக்கு கனெக்ட் மூவிக்கு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. ஆனால் அதை வைக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அதை ரசிகர்கள் ஒரு காதலோடு செய்கிறார்கள் என்றார்.

த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபடுகிறதே என்ற கேள்விக்கு, ட்விட்டரில் இருந்து ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை நான் நீக்க மறந்து விட்டேன்.

ஒரே ஸ்கூல், ஒரே ஊரு என்று பார்க்கும் பொழுது அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவராக இருந்தார். அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்கிற செய்தி என்பதில் துளி கூட உண்மை இல்லை எப்படி வருகிறது என்று எனக்கு தெரியவில்லை என்று பதிலளித்தார்.

கலை.ரா

மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை: ராமதாஸ்

கடன் மோசடி: வீடியோகான் சிஇஓ கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *