Jiiva's 'Deaf Frogs'

ஜீவாவின் ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’: பின்னணியில் ரஜினியின் குட்டிக்கதை!

சினிமா

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது திரைப்படமான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ராம், கற்றது தமிழ், கோ, டிஷ்யூம், ஈ, ராமேஸ்வரம், ஜிப்சி போன்ற படங்களில் இயக்குநர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பின் சைப்ரஸ் திரைப்பட விழாவில் அமீர் இயக்கிய ராம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் இன்றுவரை ஜீவா மட்டுமே.

அவர் திரையுலகில் 21 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அடுத்த கட்டமாக இசை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவிக்கும் நிகழ்வு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

‘டெஃப்  ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய இசை நிறுவனத்தை சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், இயக்குனர் மோகன்.G , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெஃப்  ஃப்ராக்ஸ் கலைக்கூடராமாக இருக்கும்!

நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்பொழுது, “கடந்த ஒரு வருடமாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம். மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது ’என்னாப்பா செவுட்டு தவளனு பேர் வச்சீருக்க?’ என்று கேட்டார்கள். அப்போது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்  கூறிய குட்டிகதையின் அடிப்படையில் ‘யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு ‘டெப்ஃ ஃப்ராக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. டெஃப்  ஃப்ராக்ஸ் கலைக்கூடராமாக இருக்கும்” என்றார்.

Jiiva's 'Deaf Frogs'

நானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம்…

சுயாதீன கலைஞர் கில்லா.கே என்பவரின்  ‘புரிய வை’ பாடலை வெளியிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ”எனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக  ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் அமைந்தது. நானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருக்கிறேன். ஜீவா தற்போது மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவியாக இருக்கும்.

ஜீவா போன்ற வர்த்தக திறமை கொண்டவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் இருந்தால் சுயாதீன கலைஞர்களுக்கு வானமே எல்லை.  தமிழ்நாட்டிலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயாதீன பாடல் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேடையாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனம் அமையும்” என்று வாழ்த்தினார்.

Jiiva's 'Deaf Frogs'

ஜீவா ரத்தத்திலேயே உள்ளது!

தொடர்ந்து  ‘பனிமேல் விழும் கனல் காற்று’ என்ற குறும்படத்தை வெளியிட்டு விஷ்ணு விஷால் பேசுகையில், “திரை வாழ்க்கையை துவங்கும்போது வாய்ப்புக்காக நிறைய அலைந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரைத்துறைக்கு வந்து 15 வருடங்களை நிறைவு செய்தேன். 13 ஆண்டுகள் ஜீவாவுடன் நட்பு இருந்து வருகிறேன். சினிமாவில் நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்புக்கான சரியான வழியை புதிய இளம்தலைமுறை சுயாதீன கலைஞர்களுக்கு இந்த மாதிரியான ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மூலம் ஜீவா உருவாக்கி உள்ளார்.

புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவரது ரத்தத்திலேயே உள்ளது. அவரது  தந்தை R.P. சவுத்ரி இதுபோல நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். என்னுடைய தயாரிப்பு நிறுவனமும் இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று விஷ்ணு விஷால் கூறினார்.

Jiiva's 'Deaf Frogs'

ஜீவா போன்ற வழிகாட்டி!

சுயாதீன பாடகர் கென்னிஷாவின் ‘இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி வெளியீட்டு பேசும் பொழுது, “சமூக வலைத்தளங்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு ஒரு சுலபமான வழியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் எங்களை விட சுயாதீன கலைஞர்களுக்கான ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். இது போன்ற சுயாதீன கலைஞர்களுக்கு ஜீவா போன்ற வழிகாட்டி கிடைத்திருப்பது பெரிய பரிசு. அவருக்கு தந்தை ஒரு வழிகாட்டியாக இருந்தது போல அவர் உங்களுக்கு இருப்பார்” என்று ஜெயம் ரவி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

மேகதாது வாக்கெடுப்பில் தமிழக அதிகாரிகள் கலந்துகொண்டது ஏன்? : எடப்பாடி

ஜனநாயக சக்திகளை மிரட்டுவதுதான் பாஜகவின் சாதனை : ஸ்பெய்னில் இருந்து ஸ்டாலின் மடல்!

”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0