‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’: டீசர் எப்படி?

சினிமா

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில்  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதல்முறையாக  இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் டீசரை நேற்று (செப்டம்பர் 11) மதியம் 12:12 மணிக்குதமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும்  ஜிகர்தண்டா டீசர் எப்படி

1975-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டீசர் தொடங்குகிறது. ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தைப் போலேவே இந்தப் பாகத்திலும் படத்தை இயக்குவது படத்தின் ஒருவரி கதையாக இருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. அதில் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக இருக்கிறார். அவருக்கான 70’ஸ் உடை அலங்காரம் கவனம் பெறுகிறது. பாபி சிம்ஹா போன்றதொரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸின் லுக் மற்றும் உடல்மொழி புதுசாக இருக்கிறது. ரெட்ரோ கலந்த பின்னணி இசையில் சந்தோஷ் நாரயணன் மிரட்டியிருப்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக டீசர் வெளிப்படுத்துகிறது.

இராமானுஜம்

2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சம்மனுக்கு ஆஜராகாத சீமான்… போலீசுக்கு சரமாரி கேள்விகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0