ஜிகர்தண்டா Double X : ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

சினிமா

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

அந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எத்தனையோ வெற்றி படங்களை எடுத்திருந்தாலும், ஜிகர்தண்டா போல மற்றொரு படத்தை எப்போது இயக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்தார். மேலும் அந்த படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனவும் பெயரிடப்பட்டது.

ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

முதல் பாகத்தில் நடிகர் பாபி சிம்ஹா ஒரு கேங்ஸ்டர் ஆகவும், நடிகர் சித்தார்த் ஒரு இயக்குனராகவும் நடித்திருப்பார்கள். அதேபோல் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா  இயக்குனராகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சில காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் 80’ஸ் காலகட்டத்தின் பின்னணியில் உருவாகி இருப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “மாமதுர” பாடல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போர் மூண்ட இஸ்ரேலில் சிக்கிய தமிழர்கள்… உதவி எண்கள் அறிவிப்பு!

ரூ.1000 விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0