சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான லாரன்ஸ், சூரி படங்கள்!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இந்த படம் மொத்தமாக 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நெதர்லாந்தின் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் Limelight பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகர்தண்டா படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை 1, 2 ஆகிய படங்களும் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் Limelight பிரிவில் திரையிட தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெதர்லாந்தின் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் big screen பிரிவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படம் திரையிட தேர்வாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்துமஸ்: ஓசூரிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வெள்ளை ரோஜாக்கள்!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?