நடிகர் சூர்யா மகாபாரதத்தில் வரும் கர்ணன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்ட பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், சூர்யா ஆறு வேடங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை 2’ படத்தில் பிஸியாக இருப்பதால் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் தள்ளித்தள்ளி போய்க்கொண்டுள்ளது.
இந்த நிலையில் சூர்யா பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில், கர்ணன் என்னும் பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் பான் இந்தியா படமாக உருவாகவிருக்கிறதாம்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் சூர்யா, கர்ணனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது உறுதியானால் தமிழில் ‘கர்ணா’ ஜான்வி கபூரின் அறிமுக படமாக இருக்கும். தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயசெல்லாம் வெறும் நம்பர் தான்…வரலாற்றை மாற்றியெழுதிய போபண்ணா
“ரயில் வலது பக்கம் திரும்புகிறது” : மீண்டும் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்?
Thanks for finally talking about > 'கர்ணனாக' களமிறங்கும்
சூர்யா… ஹீரோயின் யாருன்னு பாருங்க!
hey