தேடி போனதால் கிடைத்த வாய்ப்பு… வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி

Published On:

| By Kumaresan M

நடிகர் ஜெயம் ரவி மனைவியை பிரிவதாக அறிவித்த பிறகு, எஸ்.எஸ். மியூசிக் பாட்காஸ்டுக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அதில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

“சின்ன வயசுல இருந்து இன்னாசென்ட்டாதான் நான் இருந்துருக்கேன். நண்பர்கள் கூட காசை வாங்கிட்டு ஏமாத்திருக்காங்க . குழந்தையில இருந்து எல்லாரும் உண்மையா இருப்பாங்கனு நினைச்சுட்டு இருக்கேன்.  எனக்கு வாழ்க்கைல எப்படி இருக்கனும்னு தெரியாது.  நான் இனிமேலும் இப்படித்தான் இருப்பேன். எனக்கு வேற எப்படி இருக்கனும்னு தெரியல.

ஆனால், நான் எல்லாவிதத்துலயும் பிளசிங்காதான் உணருறேன்.  இந்த குடும்பத்துல பிறந்தது. சினிமாவுக்குள்ள வந்தது. நல்ல சினிமா பண்ண முடியுறது.  அப்படினு எல்லாமே ஒரு ஆசிர்வாதம்தான். வேலையை பொறுத்த வரை, நல்ல படங்கள் செய்யனும். இது மட்டும்தான் ஆசை.

நடிகர்கள் மட்டுமல்ல. நாம நல்ல என்னடர்டெயினராவும் இருக்கனும். சிலரை சினிமா ஏத்துக்கும். சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால், நாம கத்துக்கனும்.

தனிப்பட்ட முறையில் பலருக்கும் உதவி செய்திருக்கேன். இன்னும்  உதவி செய்யனும்னுதான் நினைக்கிறேன்.  எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் நல்லதுதான். எதையும் எதிர்பார்த்துலாம் பண்றது கிடையாது. ஆனால், நல்லது செஞ்சா  கிடைக்க வேண்டிய நேரத்துல நமக்கும் நல்லது நடக்கும்.

சினிமாவை பொறுத்த வரை,  நாம எதையும் தேடி போக முடியாது. நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்குறது. நல்ல டைரக்டர் கிடைக்குறது இதெல்லாம் அமையனும். முதல் 2 படத்துல எனக்கு  சம்பளம் கிடையாது. அந்த இரண்டும் என்னோட குடும்ப படம்.  தாஸ் படத்துலதான் நான் சம்பளமே வாங்கினேன். 20 வருடத்துல 30 படம்தான்  பண்ணிருக்கேன். ஏன்னா, நல்ல படத்துல நடிக்குறதுதான் என்னோட இலக்கு.

பொன்னியின் செல்வன் படத்துல  ஒரு நாள் படபிடிப்பு நடத்த  6 மாதம் உழைப்பு இருந்தது.  தமிழ் வரலாற்றை நல்லபடியா  காட்டனும்னு அந்தளவுக்கு உழைப்பு போட்டோம்.  நாம அந்த நேரத்துல அந்த டீமோட உழைப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பதுதான்  முக்கியம்.

என்னோட இரண்டாவது படத்துலயே  எனக்கு கொஞ்சம் சின்சியர் குறைஞ்சு போச்சுது.  அப்போது, எனது அப்பா முதல் படம் முதல் 100வது படம் வரை சின்சியராத்தான் இருக்கனும் . முதல் படம் எப்படி பண்ணியோ அதே மாதிரிதான் எல்லா படத்துலயும் நடிக்கனும் அப்படினு சொன்னார். இப்போ வரை, அதை நான் பின்பற்றுறேன்.

இது வரைக்கும் என்னை மோசமாக யாரும் சித்தரித்ததில்லை. என்னோட இன்டர்வியூ பார்க்குறவங்க கூட பாசிடிவாதான் ஃபீல் பண்றதா சொல்றாங்க.  நான் எப்போதுமே நானாகத்தான் இருப்பேன். எனக்கு நடிக்கவும் வராது.

ஆனால், இப்போது நிறைய கத்துகிட்டே இருக்கேன். சின்ன வயசுல தியேட்டர்ல போய் கூட படம் பார்த்தது கிடையாது. பிரிவியூ குடும்பத்தோட பிக்னிக் மாதிரி போய் பார்த்துட்டு வந்துடுவோம். ஆனால், தியேட்டர் ஆடியன்ஸ் வேற லெவல். இதுவே எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரியும். அப்படி, தளபதி படத்தைதான் முதன் முதல்ல  தியேட்டர்ல போய் பார்த்தேன். தியேட்டர்ல போய்  ஆடியன்சோட பல்சை தெரிஞ்சுகுறது முக்கியம் அப்படிங்குறதும் எனக்கு புரிஞ்சது.

போலியான உருவத்தை பார்த்து இப்போதெல்லாம் நான் ஹர்ட் ஆகுறது இல்லை. ரியாக்ட் பண்றதும் இல்லை. நம்ம இப்படி எடுத்துட்டாங்களே, அப்படி பேசிட்டாங்களே அப்படிங்குற சிந்தனையும் வேண்டாம். அதை பற்றி யோசிச்சா நம்மளோட மென்டல் ஹெல்த்தான் பாதிக்கும்.

எங்க அப்பா சினிமால எல்லா துறையிலையும் இருந்துருக்காரு.  அவரோட அறிவைதான் நாங்க பயன்படுத்திகிட்டோம். விட்டலாச்சார்யா படம் எங்களை பார்க்க வச்சாரு. அப்பாதான் எனக்கு குரு.  அண்ணன் சொல்லி கொடுத்த விஷயங்களும்  என்னை பட்டை தீட்டீயது.

இப்போ, பிரதர் படம் நல்லா வந்துருக்குது. எங்க குடும்ப படம். இப்போது, ஒரு முக்கியமான விஷயமும் உங்ககிட்ட சொல்ல போறேன். பொதுவாக, நான் நல்ல இயக்குநர்களுக்கு  போன் பண்ணி பேசுறது இல்லை. நல்லா படம் எடுத்துருக்காருனு  மனசுலயே நினைச்சுக்குவேன். ஆனால், இப்போதுதான் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு வெற்றி மாறனை போய்  மீட் பண்ணினேன். சேர்ந்து  படம் பண்ணுவோம்னு சொன்னேன். விரைவில் அவரோட கதையை நான் கேட்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel