நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் திரில்லர் ஜார்னரில் உருவாகியுள்ள சைரன் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆதி பகவான், நிமிர்ந்து நில் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுவாகும்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் சைரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று இரவு ( நவம்பர் 11) விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இடையே ‘சைரன்’ படத்தின் டீசர் வீடியோவெளியானது.
சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜெயில் கைதியாகவும், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது சைரன் படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சைரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2, இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR 33, மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!
ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!
அயோத்தியில் 24 லட்சம் விளக்குகளுடன் தீபோற்சவம்: புதிய உலக சாதனை!