நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். சமீபத்தில் ஜெயம் ரவி மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இதற்கு பதிலாக ஆர்த்தி விடுத்த அறிக்கையில், கணவருடன் பேச பலமுறை முயற்சித்தேன், பேச முடியவில்லை, விவாகரத்து முடிவு அவராக எடுத்தது என கூறியிருந்தார். ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு பாடகி கென்னிஷா பிரான்சிஸ் என்பவர்தான் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது கென்னிஷா ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் “ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்ததுதான். அவர் என்னுடைய நண்பர், client அவ்வளவு தான். ஜெயம் ரவி விவாகரத்து செய்ய நான் காரணம் இல்லை.
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டு தான் என்னிடம் அவர் வந்தார். இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். அப்புறம் இந்த விஷயத்தில் என்னை இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது. அதற்கு நேரம் இல்லை. இதுதான் என் கடைசி வார்த்தை” என்று கூறியுள்ளார்.
விவாகரத்து சர்ச்சைக்கு இடையே நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் கொடுத்த புகாரில் சென்னை ஈசிஆர் சாலையில், உள்ள ஆர்த்தியுனுடைய வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தர கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது ஜெயம் ரவியின் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காலாண்டு தேர்வு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
புதுக்கோட்டை: சாலையோரம் நின்ற காரில் 5 உடல்கள் மீட்பு!
என்ன இருந்தாலும் ஒரு குடும்பத்த பிரிச்ச பாவம் உனக்கு வேணாம் தாயீ